சமூக இடைவெளியால் இன்புளுவன்ஸா நோய்த்தொற்று குறைவடைந்துள்ளது: ஆய்வு முடிவுகள்

1 week

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்ட சமூக இடைவெளி இன்புளுவன்ஸா தொற்றை குறைத்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நோய் தொற்றை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முன்னொருபோதும் இல்லாதவகையில் ஏனைய சில தொற்றுநோய்களில் தாக்கம் செலுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் பரந்தளவில் முடக்கநிலை அமுல்படுத்தபட்ட சீனாவில் சின்னம்மை,பெரியம்மை மற்றும் பாலியல் தொற்று நோய்கள் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.இந்த தொற்றுகள் தற்போது குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பாக இன்புளுவன்ஸா கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சின் மாதாந்த அறிக்கைகளின் அடிப்படையில் முடக்கநிலை அமுல்படுத்தபட்ட காலம் முதல், 90 வீதம் வரை நோய் தொற்று குறைவடைந்துள்ளது. சராசரியாக முழுநாட்டிலும் காணப்பட்ட மாதாந்த தொற்று சராசரியாக 290000 லிருந்து 23000 வரை குறைவடைந்துள்ளது 

கனடாவின் நோய் கண்காணிப்பு குழுவின் சமிபத்திய அறிக்கையும் இன்புளுவன்ஸா தொற்று குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கிறது.; ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வாராந்தம் இதுகுறித்த ஆய்வு அறிக்கை முன்வைக்கப்படுகிறது.

ஒருவருடத்திற்கு முன்னர் தென்கொரியாவில் அதிகரித்து காணப்பட்ட தொற்றுநோய்கள் சில தற்போது 83 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வழமையாக இக்காலப்பகுதியில் எமது வைத்தியசாலைகளில் வாட்களில் சிறுவர்கள் அதிகளவில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆனால் இவ்வருடம் வார்ட் வெறுமையாக காணப்படுவதாக சிட்னி பல்கலைக்கழக நிபுணர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் இன்புளுவன்ஸா காரணமாக 3 தொடக்கம் 5 மில்லியன் வரை தொற்றாளர்களும் ஐந்து இலட்சம் வரையான உயிரிழப்புகளும் பதிவாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்தள்ளது.

 

 

Read next: கொரோனாவால் வியட்னாமில் முதல் மரணம் பதிவானது!