இந்தோனேஷிய சிறைச்சாலை தீ விபத்தில் கைதிகள் பலர் பலி

Sep 08, 2021 06:37 am

இந்தோனேஷியாவில் சிறைச்சாலையொன்றில் தீ பரவலில் 41 பேர் பலியாகியுள்ளனர்.

சம்வத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.பெரும்பாலான சிறைக்கைதிகள் தூங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீயணைப்பு படையினர் கடும் பிரியத்தனத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலையின் ஒரு பிரிவில் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டில் கைதானவர்கள் இருந்துள்ளனர்.குறித்த பகுதியிலேயே தீ பரவியுள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.காயமடைந்தவர்களில் எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 72 பேருக்கு சிறு எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தீ பரவியமைக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.தலைநகர் ஜகார்த்தாவுக்கு அண்மித்த பகுதியில் குறித்த சிறைச்சாலை இருப்பதுடன் மின் ஒழுக்கு காரணமாக தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த சிறைச்சாலையில் 2000 ற்கும் அதிகமான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.ஆனால் 120 பிரிவுகள் அதனுள் இருக்கின்றன.இந்தோனேஷியாவில் உள்ள சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை நீண்ட நாட்களாக நிலவிவரும் பிரச்சனையாகும்.

Read next: கருக்கலைப்பு சட்டத்துக்கு முரணானது - மெக்சிக்கோ நீதிமன்றம்.