ஆப்கான் மக்களுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும்- ஜெய்சங்கர்!

Sep 14, 2021 04:09 pm

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐ.நா சபையில் கருத்து வெளியிட்ட அவர், ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ அனைத்து நாடுகளும் உதவி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது நிலவி வரும் மோசமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு கடந்த காலங்களைப் போலவே ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக நிற்க இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஆப்கானிஸ்தான் மக்களின் நலனுக்காக 3 பில்லியன் டொலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாகவும் கூறிய அவர், மனிதாபிமான உதவிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டார்.

Read next: ஊரக உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு!