ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்தியா

Jan 24, 2023 05:45 pm

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்துள்ளது. 

இந்த வெற்றியைத் தொடர்ந்து ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி, இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியது. 

இந்தியா 114 தரநிலை புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.

நியூசிலாந்து அணி 111 புள்ளிகளுடன் 4ம் இடத்திற்கு பின்தங்கியது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றினால், தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளும்.

Read next: அமெரிக்க நீதிமன்றத்தில் அடுத்த மாதம் ஆஜராகி வாதாட உள்ள உலகின் முதல் ரோபோ வழக்கறிஞர்