இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது! அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை பிடித்தது

1 week

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,25,89,067ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 1,03,558 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 17ம் தேதிக்கு பிறகு புதிய தொற்று உச்சத்தை அடைந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மேற்குறிப்பிட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்த 2வது நாடு என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது. 

இதற்கு முன்பு அமெரிக்காவில் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி பதிவானது.

நேற்று ஒரே நாளில் 478 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 

இதன்மூலம் பலி எண்ணிக்கை 1,65,101 ஆக உயர்ந்துள்ளது. 

Read next: பிரான்ஸில் மீண்டும் தாக்குதலுக்கு திட்டம்! சிறுமி உட்பட 5 பெண்கள் கைது