ஜனவரி அளவில் இந்தியாவினால் அஸ்ரஸெனெககாவை பெற்றுக்கொள்ள முடியும் - உள்ளுர் தயாரிப்பாளர்கள் தெரிவிப்பு

2 weeks

சுகாதார ஊழியர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு ஜனவரி அளவில் தடுப்பு மருந்தை பெற்றுக்கொடுக்க முடியும் என அஸ்ரஸெனெக்காவுடன் கொவிட் தடுப்பு மருந்துக்கான உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டுள்ள இந்திய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 மில்லியனை கடந்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பாளரான சீரம் நிறுவனம் ஏற்கனவே மில்லியன் கணக்கான மருந்துகளை தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பிரித்தானியாவை தளமாகக்கொண்ட அஸ்ரஸெனெக்கா பல நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுடன் மருந்து விநியோகம் மற்றும் தயாரிப்புக்கான பல உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

வியாழக்கிழமை லான்செட் வெளியிட்ட தகவலில் அஸ்ரஸெனெக்காவின் தடுப்பு மருந்து வயோதிபர்களிடத்தில் சிறந்த பலனை வெளிப்படுத்தியுள்ளதாக அறிவித்திருந்தது.

இறுதிக்கட்ட பரிசோதனை அறிக்கையை கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் வெளியிட முடியும் என்றும் நிறுவனம் தெரிவித்திருந்தது.

மருந்து தயாரிப்பாளர்களாக பைஸர் மற்றும் மொடர்னா ஆகியவனவும் தத்தமது தடுப்பு மருந்தின் 90 வீத பாதுகாப்பை வெளிப்படுத்தியிருந்தது.

பைஸர் மற்றும் மொடர்னாவின் செயற்பாடுகளை இந்தியா கண்காணித்து வருவதுடன் நாட்டின் அதிகளவான சனத்தொகை காரணமாக விநியோகம் மற்றும் இருப்பு தொடர்பில் பிரச்சனை எழும் என்றும் தெரிவித்துள்ளது.

அவசரநிலை பயன்பாட்டுக்கான ஒப்புதலை எதிர்பார்ப்பதுடன் அதனை விரைவில் பொதுமக்களுக்கு பயன்படுத்தவும் நிறுவனம் எதிர்பார்ப்பதாக சீரம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அதார் பூனாவாலா குறிப்பிட்டுள்ளார்.

சில்லரை சந்தையில்    தடுப்பு மருந்துக்கான விலை 5 தொடக்கம் ஆறு டொலர் வரை செல்லும் என்றும் அதிகளவான எண்ணிக்கை கொள்வனவு செய்ய இருப்பதால் இந்திய அரசாங்கம் இதனை மிகக்குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 1.3 பில்லியன் என்ற அனைத்து மக்கள் தொகைக்கும் சென்றடைய இரண்டு தொடக்கம் மூன்று ஆண்டுகள் செல்லும் என பூனாவால்ல குறிப்பிட்டுள்ளார்.

உலகில் அதிகளவில் தொற்றுக்குள்ளான நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

நேற்றைய 24 மணித்தியாலங்களில் 45882 புதிய தொற்றாளர்களும் 584 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.

Read next: ட்ரம்பின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் பகிரங்கமாகச் சந்தேகம் வெளியிட்ட பல குடியரசுக்கட்சியினர்