இந்தியாவில் ஒரே நாளில் 44 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்

2 weeks

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  38,617 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, இது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையும் 89.12 லட்சத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 474 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை கொரோனா பாதிப்பால் 1,30,993 பேர் உயிரிழந்துள்ளனர்.  4.46 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஒரே நாளில் 44 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 83.35 லட்சத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

Read next: கொரோனா வைரஸின் உயிரணு பிறழ்வாள் ரஷ்யாவில் உயிர் இழப்புகள் அதிகரிப்பு