பதவியை ராஜினமா செய்வதாக தெரிவித்துள்ள இம்ரான் கட்சி எம்பிக்கள்

Jan 24, 2023 07:57 pm

பாகிஸ்தானில் இம்ரான் கட்சி எம்பிக்கள் மேலும் 43 பேர் ராஜினாமா செய்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் பதவி பறிக்கப்பட்ட பிறகு அங்கு அவரது தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி எம்பிக்கள் தங்கள் பதவியை தொடர்ந்து ராஜினமா செய்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு ஜூலையில் 123 எம்பிக்கள் ராஜினாமா செய்தனர். அதில் 11 பேர் ராஜினாமா மட்டுமே ஏற்கப்பட்டது. 

கடந்த வாரம் 70 எம்பிக்கள் ராஜினாமா ஏற்கப்பட்டது. தற்போது மேலும் 43 எம்பிக்கள் ராஜினாமா நேற்று ஏற்கப்பட்டதாக நாடாளுமன்ற சபாநாயகர் ராஜா பெர்வியாஸ் அஷ்ரப் அறிவித்தார்.

Read next: பெருவில் தொடரும் போராட்டங்கள் - பொலிசார் மீண்டும் கண்ணீர் புகை பிரயோகம்