பிரான்ஸில் அடையாள அட்டை, கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கான முக்கிய தகவல்

Oct 03, 2022 12:29 pm

பிரான்ஸில் தங்கள் அடையாள அட்டை, கடவுசீட்டை புதுப்பிக்க அல்லது பெற 7 மில்லியன் மக்கள் முயற்சிக்கும் போதிலும் அவர்களால் முடியவில்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அதனை பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக 350 கைரேகை சாதனங்கள் நிறுவப்பட்டு, அதிகாரிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளனர். 

லோன்தெர்நு (Landerneau) நகர மண்டபத்தில் அடையாள அட்டை அல்லது கடவுசீட்டை புதுப்பித்துக் கொள்ள விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் குவிந்து கிடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் மக்கள் மேலும் பல நாட்கள் அல்லது மாதங்கள் பொறுமை காக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் விண்ணப்பம் சமர்ப்பித்த ஒருவருக்கு நேற்று முன்தினமே அதற்காக சந்திப்பை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. 

விண்ணப்பங்களின் அதிகரிப்பை கருத்திற்கு கொண்டு இந்த கோடைகாலத்தில் அவசர திட்டமாக, பிரான்ஸ் முழுவதும் 350 கைரேகை சாதனங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த நடவடிக்கையும், போதுமானதாக இருக்காதென குறிப்பிடப்படுகின்றது. 

லோன்தெர்நு மாவட்டத்தில் முழுநேர ஊழியர்கள் பணியமர்த்தினாலும், தாமதங்கள் இன்னும் நீண்டதாகவே உள்ளது. 

நாங்கள் நீருக்கு அடியில் பணியாற்றுவதனை போன்ற அழுத்தத்தில் உள்ளோம். அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிலர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து தங்களின் ஆவணங்களைப் பெறுவதற்கு வருகைத்தந்து பெற முடியாமல் வீடு திரும்ப நேரிட்டுள்ளது. இந்த சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு பிரான்ஸ் முழுவதும் இருந்து விண்ணப்பங்கள் வருவதாகவும் தாமதங்களை குறைப்பதற்கு மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

      

Read next: ஆயுத பூஜையை ஒட்டி பூக்கள் விலை கிடு கிடு உயர்வு