வட்டி விகிதங்கள் பற்றி இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

Jan 25, 2023 03:39 am

கொள்கை வட்டி விகிதத்தில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்படாதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை முறையே 14.50 வீதம் மற்றும் 15.50 வீதமாகப் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

சமீபத்திய மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள் மற்றும் கணிப்புகளை கருத்தில் கொண்டு நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதற்கமைய, பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பண நிலைமைகள் போதுமான அளவு இறுக்கமாக இருப்பதை உறுதிப்படுத்த, நடைமுறையில் உள்ள இறுக்கமான நாணயக் கொள்கை நிலைப்பாட்டைப் பேணுவது இன்றியமையாதது என்று இலங்கை மத்திய வங்கி கருதுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read next: ஆஸ்திதேலியாவில் தலைவிரித்தாடும் சூதாட்டம் - 2.1 பில்லியன் டொலரை இழந்த மக்கள்