நீங்க சொன்ன வார்த்தைகளை எப்போதும் மறக்கமாட்டேன் சார்-பிரதீப் ரங்கநாதன்.

Nov 12, 2022 12:25 pm

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.

சமூகக் கருத்துக்களை கொஞ்சம் காமெடி கலந்து பொழுதுபோக்கு படமாக வெளியான கோமாளி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனையடுத்து இவர் இயக்கத்தில் உருவான லவ் டுடே படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தை ஏஜிஎஸ் ப்ரொடக்ஷன் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இயக்குநராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பிரதீப் நடித்திருந்தார்.

கதாநாயகியாக இவானா நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், யோகி பாபு, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 

 இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாக பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இதைவிட நான் என்ன கேட்க முடியும்.

சூரியனுக்கு அருகில் இருப்பதுபோல் இருந்தது. அவ்வளவு சூடு. இறுக்கமான அணைப்பு, அந்தக் கண்கள் , சிரிப்பு , நடை மற்றும் அன்பு. ரஜினிகாந்த் சார் லவ் டுடே பார்த்து என்னை வாழ்த்தினர். நீங்க சொன்ன வார்த்தைகளை எப்போதும் மறக்கமாட்டேன் சார் எனக் குறிப்பிட்டுள்ளார். 

 


Read next: கட்சி தலைவர் மகிந்த தலைமையிலான கூட்டங்களை நிறுத்திய பொதுஜன பெரமுன