வெளிநாட்டு மனைவியை இலங்கையில் பாலியல் தொழிலுக்காக விற்க முயன்ற கணவன்!! அதிர்ச்சி தகவல்

Jul 20, 2021 09:47 am

உஸ்பெகிஸ்தான் நாட்டுப் பெண்ணை இலங்கையில் பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்ய முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்றும், அவர் குறித்த பெண்ணின் கணவர் என்றும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

குறித்த நபர் இதற்கு முன்னரும் 36 வயது வெளிநாட்டுப் பெண் ஒருவரை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read next: “ஜப்பான் மீது அணுகுண்டு வீசுவோம்” பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள சீனா - அதிகரிக்கும் பதற்றம்