அமெரிக்காவை தாக்கும் மற்றுமொரு புயற்காற்று

Sep 14, 2021 10:22 am

அமெரிக்காவில் நிக்கலோஸ் புயற்காற்று நிலச்சரிவையும் மழையையும் ஏற்படுத்தியுள்ளது.மிக மோசமான வெள்ளம் ஏற்படுவதற்கு அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தரையை கடப்பதற்கு முன்னர் புயுற்காற்று கடற்பரப்பில் வலுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் லூஸியானாவில் அவசரகாலநிலையை ஜனாதிபதி ஜோ பைடன் அமுல்படுத்தியுள்ளதுடன்,மாநிலத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இடா புயற்காற்று ஏற்பட்டு சில வாரங்கள் கடந்த நிலையில் மற்றுமொரு புயல் தாக்கியுள்ளது.

நிக்கலஸ் புயற்காற்று மணிக்கு 75 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதாக வானிலை அவதான அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹெளஸ்டனையும் இந்த புயல் தாக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.எனவே இந்த புயற்காற்றினால் எவருக்கும் உயிராபத்தை ஏற்படுத்த விடக்கூடாது என லூஸியானா ஆளுநர் ஜோன் பெல் எட்வர்ட்ஸ் ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இடா புயற்காற்றினால் லூசியானாவில் தொடர்ந்தும் 119000 வர்த்தக நிலையங்களும் வீடுகளும் மின்சாரமின்றி இருக்கின்றனர்.

Read next: தனிமைப்படுத்தலில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்