பெரு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் சிக்கி தவிப்பு!

Jan 24, 2023 06:16 am

பெரு அனைத்துலக விமானம் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் அங்கு சிக்கித் தவிக்கின்றனர்.

விமானம் நிலையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டிருப்பதால் பயணிகள் சிக்கி தவிக்கின்றனர்.

புகழ்பெற்ற மச்சு பிச்சு (Machu Picchu) சுற்றுலாத்தலம் காலவரம்பின்றி மூடப்பட்டதால் அந்நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்ததால், விமான நிலையத்தின் ஒரு பகுதியும் மச்சு பிச்சுவின் பழங்காலச் சிதைவுகள் பகுதியும் மூடப்பட்டன.

சுமார் 400 பயணிகள் மச்சு பிச்சுவில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களில் முக்கால்வாசிப்பேர் வெளிநாட்டவராகும்.

பெரு அதிபர் டினா போலுவார்டே (Dina Boluarte) பதவி விலகவேண்டும் என்றும் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read next: வடமாநிலங்களை போன்று சென்னையிலும் செல்போன் கொள்ளை