இத்தாலியில் புது வருட கொண்டாட்டத்தால் செத்து மடிந்த நூற்றுக்கணக்கான உயிர்கள்!

3 months

இத்தாலி நாட்டில் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் தடைகளை மீறி செய்த காரியத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள், விலங்குகள் மற்றும் பாரம்பரிய இடங்களைப் பாதுகாக்கவே இத்தாலி அரசாங்கத்தால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும் பெரும்பாலான மக்கள் அரசாங்கத்தின் தடையைப் புறக்கணித்து செய்த காரியம் பல உயிர்களை பலியாக்கியுள்ளது.

இந்த நிலையில் இத்தாலியின் தலைநகரான ரோமில், புத்தாண்டை கொண்டாடும் விதமாக மக்களால் பட்டாசுகள் மற்றும் வான வேடிக்கைகள் வெடிக்கப்பட்டது.

இதனால், நூற்றுக்கணக்கான பறவைகள் இருந்துள்ளன. ரோம் நகரின் சில தெருக்களில் சாலை முழுவதும் செத்து மடிந்து கிடைக்கும் பறவைகள் பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பறவைகள் கொத்து கொத்தாக இறந்து கீழே விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன.

பறவைகள் இறந்ததற்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் விலங்குகளை பாதுகாப்பதற்கான சர்வதேச அமைப்பு, பறவைகளுக்கு மிக அருகில் பட்டாசுகள் வெடித்தால், அவை பயத்திலும் அதிர்ச்சியிலும் இறந்துள்ளதாக தெரிவித்தது.


Read next: இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மக்கள் வாழ மிக மிக ஆபத்தான 10 இடங்கள்! வரைபடம் வெளியானது