அணு ஆயுத தாக்குதல் அல்லது விபத்து நடந்தால் உங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது?

Jan 22, 2023 01:02 pm

சமீப காலமாக அணுவாயுத தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் நீடித்து வருகிறது. இந்நிலையில், ஒருவேளை அணுவாயுத தாக்குதலுக்கான வாய்ப்பிருந்தால் அல்லது நடத்தப்பட்டால் நாம் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

இது குறித்த ஆய்வுகளுக்கு டூம்ஸ்டே கடிகாரம் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. டூம்ஸ்டே கடிகாரம் என்பது பூமிக்கும் மனித குலத்திற்கும் ஏற்படும் ஆபத்துக்களைக் காட்சிப்படுத்துவதாகும். 

உலகில் ஏற்படும் ஆபத்துகளுக்கு ஏற்ப இந்த கடிகாரம் கூடிக்,குறையும். இதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த கடிகாரம் பன்னிரண்டிற்கு இரண்டு நிமிடங்களாக இருந்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 100 விநாடிகள் முன்னேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏதாவது ஆபத்து ஏற்படுவதற்கான அறிகுறியாக கொள்ளப்படுகிறது. 

தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் அணுவாயுத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்படுகின்றமையும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. 

இந்நிலையில் அணுகுண்டு வெடிக்கும்போது அதிகளவு ஆற்றல் வெளிப்படும். உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலான ஹிரோஷிமா, மற்றும் நாகசாகி மீதான தாக்குதல்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். குறிப்பாக இந்த தாக்குதலில் 70 ஆயிரம் மக்கள் உயிரிழந்திருந்தனர்.  

இவ்வாறான சூழ்நிலையில், அணுவாயுத தாக்குதலில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பதுத் தொடர்பில் சைப்ரஸில் உள்ள நிகோசியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். 

இதனை செய்வதற்காக அவர்கள் அணுகுண்டு வெடிப்பை உருவகப்படுத்தியுள்ளனர். இதில் அணுகுண்டு தாக்குதலால் ஏற்படும் காற்றின் வேகம் பாரியளவு அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஒரு நிலையான கட்டிடத்தில் தங்கினால் மாத்திரம் போதாது எனக் குறிப்பிடும் ஆய்வாளர்கள் பொங்கி எழும் புயல் ஒரு நபரின் உடல் எடையை விட 18 மடங்கிற்க்கு ஒத்த சக்திகளை உருவாக்கலாம் எனவும் தெரிவித்தனர். 

எனவே மக்கள் தங்குமிடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், குண்டுவெடிப்பை நேரடியாக எதிர்கொள்ளும் முன் சுவரின் மூலைகளில் தங்குவதால் காற்றின் வேகத்தினால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். 

அணுவாயுத தாக்குதல்களுக்கான சாத்தியம் குறைவாக இருந்தாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிந்துகொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.   


Read next: உலகில் மிகவும் வயது வந்த நாய் இதுதான்!