மாவீரர் நாள்! உணர்வுபூர்வ அஞ்சலிக்கு தயாராகிய இலங்கை உட்பட உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள்

Nov 27, 2022 10:01 am

இலங்கை மற்றும் உலக நாடுகள் பலவற்றில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பிற்கு உணர்வுபூர்வமாக தயாரியுள்ளதாக தகவல் வெளியதாகியுள்ளது.

மாவீரர் நாள் நினைவேந்தல் வடகிழக்கு மாகாணத்திலுள்ள சகல மாவீரர் துயிலும் இல்லங்களிலும் உலகம் முழுவதும் இன்று உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்துள்ள நிலப்பரப்புகளில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அனைத்து துயிலும் இல்லங்களிலும் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். 

இன்று 27 ஆம் திகதி மாலை 06.05 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும் இல்லங்கள் வீடுகள் பொது இடங்களில் சம நேரத்தில் சுடர் ஏற்றபட உள்ளது.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைவரையும் அணிதிரண்டு வருமாறும் அந்தந்த துயிலும் இல்லங்களின் பணிக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை, பிரித்தானியா, பிரான்ஸ், பெல்ஜியம், கனடா, உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் தமிழர்கள் இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

May

May

May

May


Read next: தந்தை கொண்ட வந்த வெளிநாட்டு சாக்லேட்., 8 வயது மகனுக்கு எமனாக மாறிய சம்பவம்