வுஹான் ஆய்வக ரகசியங்களுடன் அமெரிக்காவுக்கு தப்பி வந்த சீன உயர் அதிகாரி? பைடன் எடுத்த அதிரடி நடவடிக்கை

Jun 18, 2021 08:40 am

சீனாவில் உளவுத்துறையில் மூத்த அலுவலராக இருந்த ஒருவர் அமெரிக்காவுக்குத் தப்பிவந்து, வுஹான் ஆய்வகம் குறித்த இரகசியங்களை வெளியிட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

சீன பாதுகாப்புத் துறையில் துணை அமைச்சராகவும், சீன உளவுத்துறையில் முக்கிய அலுவலராகவும் இருந்தவர் Dong Jingwei. 

இவர் கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் திகதி தனது மகளுடன் சீனாவிலிருந்து தப்பி அமெரிக்கா வந்ததாகவும், அவர்தான் வுஹானிலுள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியது தொடர்பான இரகசியங்களை அமெரிக்காவுக்கு அளித்ததாகவும் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்தே அமெரிக்க அதிபரான ஜோ பைடன் வுஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியதா என்பதை அறிவதற்கான விசாரணையை முடுக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒரு பக்கம் இது வதந்தியாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில், மறுபக்கம் இந்த செய்திக்கு ஆதரவாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குத் தப்பிவந்த சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சக அலுவலரான Dr Han Lianchao என்பவர் என்பதால், அது நம்பத்தகுந்த செய்தியாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

Read next: இந்தியாவுடனான ஒத்துழைப்பை இலங்கை கவனத்தில் கொண்டிருக்கும் – அரிந்தம் பாக்சி