ஹரியும் மேகனும் செய்தது ஒன்றுமில்லை.ஆனால் அனைவரது கவனத்தை ஈர்க்க முற்படுகின்றனர்.ஆர்பிட்டர்.

Jun 11, 2021 02:13 pm

இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மார்க்கலும் தனியான வாழ்க்கையை வாழ்வதற்காக பிரித்தானியாவிலிருந்து வெளியேறியுள்ளனர்.

ஆனாலும் கூறப்படும் தனியானஇசுதந்திரமான வாழ்க்கைக்காக இவர்கள் வெளியேறினார்களா என்பதில் சந்தேகம் எழுவதாக மாளிகை முன்னாள் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டிக்கி ஆர்பிட்டர் இவர் பிரித்தானியாவின் ஊடகவியலாளரும் எலிசபெத் மகாராணியின் முன்னாள் ஊடக பேச்சாளரும் ஆவார்.

அமெரிக்காவுக்கு இவர்கள் சென்றுள்ளார்கள் என்பது முற்றிலும் பாசாங்கானது என அவர் தெரிவித்திருந்தாhர்.

“தனிப்பட்ட காரணங்களுக்காக இவர்கள் பிரித்தானியாவில் இருந்து சென்றுள்ளனர்.பிரசித்திபெறுவதிலிருந்து விலகியிருக்கவே அவர்கள் இவ்வாறு வெளியேறியுள்ளனர்.தம்பதியினர் வெளியேறியதிலிருந்து ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு எதனையும் செய்துவிடவில்லை.ஆனால் பிரபலமடைய எதிர்பார்க்கின்றனர்” டிக்கி ஆர்பிட்டர்

தற்போது இரண்டாவது குழந்தையை கவனித்துக்கொள்வதற்காக ஹரி விடுமுறையை எடுத்துள்ளார்.இந்த நிலையில் மேலும் ஐந்து மாதங்கள் அவ்வாறே கழித்துவிடுவார் என ஆர்பிட்டர் நம்புகின்றார்.

இதேவேளை ஆர்ப்பிட்டரின் தர்க்கத்தில் ஒரு நியாயம் இருக்கின்றது.அதாவது பிரித்தானிய அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த வருடம் ஹரி அறிவித்திருந்தார்.ஒரு தனிச்சுதந்திரம் கேட்டிருந்;த போதிலும் ஒப்ராஹ் வின்ப்ரேயுடனான நேர்காணல் என்பது அவர்களின் கோரிக்கையை பார்க்கிலும் முற்றிலும் எதிரானது.இவர்களை பொதுவெளியில் பிரகாசிக்க வைக்க முடியாது என தனது கருத்தை ஆர்ப்பிட்டர் தெரிவித்திருந்தார்.

இவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியிருந்தாலும் கவர்ச்சிகரமான நேர்காணலை வழங்கியிருந்தாலும் குறைந்தளவான சுயவிபரத்தை கொண்டுள்ளனர்.என ஆர்பிட்டர் தெரிவித்திருந்தார்.

ஆர்ப்பிட்டர் ஹரி மேர்கன் குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவல்ல.

ஹரி மேகன் ஆகிய இருவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்ததாக ஒப்ராவுடனான நேர்காணலில் தெரிவித்திருந்தனர்.தான் உயிருடன் இருக்க விரும்பவில்லை.இதனை ஹரியிடம் சொல்ல வெட்கப்படுகிறேன் .ஏனென்றால் அவர் எதிர்கொண்ட இழப்புகள் அவ்வளவு என மேகன் தெரிவித்திருந்தார்.

பொருளாதார ரீதியில் தன்னை தனது குடும்பம் கைவிட்டதாகவும் தனது தாயாரின் பணத்தைக்கொண்டு மனைவியுடன் நிம்மதியாக இருப்பதாக ஹரி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அண்மையில் ஹரி மேகன் தம்பதிகளுக்கு இரண்டவது பெண் குழந்தை பிறந்தது.இந்தக் குழந்தைக்கு 2ம் எலிசபெத் மகாராணி மற்றும் ஹரியின் தாய் இளவரசி டயானா ஆகியோரின் நினைவாக லில்லிபெட்  லில்லி டயானா மவுன்ட் பேட்டன் வின்ட்சர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Read next: ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா... கலக்கும் தென்னிந்திய மொழிப்படங்கள்