ஜெர்மனியில் பணி செய்ய விரும்பும் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

Mar 29, 2022 06:32 am

ஜேர்மனியில் ஏராளமான பணியிடங்கள் வெற்றியிடமாக உள்ளன, அவற்றை நிரப்புவதற்காக ஜெர்மனி அரசாங்கம் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த இலையுதிர் காலத்தில் 390,000 திறன்மிகு பணியார்களுக்குத் தட்டுப்பாடு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

புதிய அரசும் வெளிநாட்டவர்கள் ஜேர்மனியில் பணி செய்வதற்கான கடுமையான கட்டுப்பாடுகளை அகற்றவும், புலம்பெயர்தல் கொள்கைகளை எளிதாக்கவும் திட்டமிட்டு வருகிறது. 

இந்நிலையில், ஜேர்மனியில் என்னென்ன பணிகள் காலியாக உள்ளன. எந்த பணிகளுக்கு அதிக அளவில் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்பது குறித்த விவரங்களை, பணி தேட உதவும் இணையதளமான LinkedIn வெளியிட்டுள்ளது.

ஜேர்மனியில் பணி செய்வதற்கு, உங்களுக்கு ஜேர்மன் மொழி பேசத் தெரிந்திருக்கவேண்டும் என்பது பல நிறுவனங்களில் அவசியம் என்றாலும், இப்போது பல நிறுவனங்கள் ஆங்கிலம் பேசுபவர்களையும் பணிக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கின்றன என்பது கூடுதல் மகிழ்ச்சியான விடயம்.

LinkedIn இணையதளம், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜேர்மனியில் என்னென்ன வகை பணியிடங்களுக்கு அதிக அளவில் ஆட்கள் தேவைப்பட்டார்கள் என்பதை ஆராய்ந்து, அவ்வகையில், தற்போது 25 வகை பணிகளுக்கு அதிக அளவில் ஆட்கள் தேவை இருப்பதாக தெரிவித்துள்ளது.

விருப்பமும் தகுதியும் உடையோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் ஜெர்மனி அறிவித்துள்ளது.


Read next: பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள்..!