ஹெய்ட்டி ஜனாதிபதி தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

Jul 07, 2021 12:09 pm

ஹெய்ட்டி ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது தனிப்பட்ட இல்லத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் க்ளோட் ஜோசெப் தெரிவித்துள்ளார்.

அடையாளம் தெரியாத ஆயுதத்தாரிகளினால் ஜனாதிபதி தாக்கப்பட்டுள்ளார்.

அவரது மனைவியும் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

53 வயதுடை ஜொவெனெல் மொய்ஸ் 2017 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தார்.இவரது காலப்பகுதியில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பல நடத்தப்பட்டதுடன் ஊழல் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டிருந்தன.


Read next: மோசமான நிலைக்கு செல்லும் இந்தோனேசியா