பெண்கள் பள்ளிக்குள் புகுந்த பயங்கரவாதிகள்! 30 மாணவிகளை கடத்தியதாக தகவல்

1 month

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாகாணம் கதுனாவில் இகாபி என்ற நகரிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில்  மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிகளுடன் வகுப்பறைக்குள் நுழைந்தனர்.‌ 

அதன்பின், அவர்கள் பெண்கள் உட்பட 30 மாணவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச் சென்றனர்.‌ 

இதுதவிர பள்ளிக்கூட ஊழியர்கள் சிலரும் கடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, கடந்த 2 வாரங்களுக்கு முன் ஜம்பாரா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து 279 மாணவிகள் கடத்தப்பட்டதும், அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Read next: மற்றுமொரு தேசிய பூட்டுதலுக்கு தயாராகும் ஐரோப்பிய நாடுகளின் ஒன்று!