வட நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்ட மாணவர்கள் விடுவிப்பு!

Aug 28, 2021 11:17 am

வட நைஜீரியாவில் அமைந்துள்ள இஸ்லாமிய பாடசாலை ஒன்றில் கடந்த மே மாதம் துப்பாக்கி ஏந்தியவர்களால் கடத்தப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் 5 வயதுடையவர்கள் என்று பாடசாலையின் தலைமை ஆசிரியர் வியாழக்கிழமை பிற்பகுதியில் கூறினார்.

விடுவிக்கப்பட்ட மாணவர்களின் சரியான எண்ணிக்கை உறுதிபடுத்தப்படவில்லை.

மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் நைஜர் மாநிலத்தில் உள்ள சாலிஹு டாங்கோ இஸ்லாமியப் பாடசாலையை தாக்கியதில் பல ஆசிரியர்களுடன் 136 மாணவர்களும் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஜூன் மாதம் 15 மாணவர்கள் தப்பிச் சென்றதாகவும் மேலும் 6 பேர் சிறைப்பிடிக்கப்பட்டபோது இறந்ததாகவும் பாடசாலை அதிகாரிகள் கூறுகின்றனர்.


Read next: பாகிஸ்தான் மீனவர்களை விடுவித்தது இந்தியா!