நைஜீரியாவில் தொடரும் மாணவர்கள் கடத்தல்

Jul 05, 2021 03:20 pm

நைஜீரியாவின் வடமேல் பகுதியில் 140 பாடசாலை மாணவர்களை ஆயுதத்தாரிகள் கடத்தியுள்ளனர்.

கடுனா பகுதியின் தங்குமிட பாடசாலையில் உள்ள மாணவர்களே இவ்வாறு ஆயுதத்தாரிகளினால் கடத்தப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 165 மாணவர்கள் கடத்தப்பட்டதாகவும் இவர்களில் 25 பேர் தப்பித்து விட்டதாகவும் அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடத்தப்பட்ட மாணவர்களை தேடும் பணிகளில் கடுனா பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் வரை சுமார் ஆயிரம் மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர் ஆயுதத்தாரிகளுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தின் பின்னர் இடம்பெற்ற 4வது பாடசாலை தாக்குதல் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.
Read next: இங்கிலாந்து தேசிய சுகாதார சேவைகள் பணியாளர்களுக்கு உயரிய கௌரவம்