அடிதூள் சாதனை படைக்க.. இந்தியாவுக்கு மெகா வாய்ப்பு - இப்போதே வேதனையில் இலங்கை அணி

Jul 19, 2021 08:11 pm

கொழும்பு: இலங்கைக்கு எதிராக. இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில், நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்நிலையில், இந்திய அணிக்கு இலங்கைக்கு எதிராக சாதனை படைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது இலங்கை அணிக்கு எதிராக தொடர்ந்து ஒன்பதாவது தொடரை வெல்ல இந்திய அணி தயாராகி வருகிறது. ஆம்! கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்தியா - இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதிய தொடரில், இந்திய அணி தொடர்ச்சியாக 8 தொடர்களை வென்றுள்ளது.

அதாவது, கடந்த 2007 முதல் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய அனைத்து தொடர்களிலும் இந்திய அணி வெற்றிப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், நாளை (ஜுலை. 20) இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில், வெற்றிப் பெறும் பட்சத்தில் இலங்கைக்கு எதிராக தொடர்ந்து 9வது முறையாக இந்திய அணி தொடரை வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, இந்திய அணி தொடர்ச்சியாக வெஸ்ட் இன்டீஸுக்கு எதிராக 10 தொடர்களில் வென்றிருந்தது. இந்த பட்டியலில், பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. 1996 முதல் 2020 வரை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 11 தொடர்களில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக வென்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. முன்பு சொன்னது போல வெஸ்ட் இன்டீஸுக்கு எதிராக தொடர்ச்சியான 10 சீரிஸ் வெற்றிகளுடன் உள்ளது. மூன்றாவது இடத்தில் தொடர்ச்சியான 9 சீரிஸ் வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்கா உள்ளது. எதிரணி மீண்டும் ஜிம்பாப்வே தான்.

அதேபோல், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 9 தொடர் வெற்றிகளுடன் பாகிஸ்தான் நான்காவது இடத்தையும் ஆக்கிரமித்துள்ளது. இப்போது நாளைய போட்டியை வெல்லும் பட்சத்தில், 9 தொடர் சீரிஸ் வெற்றிகளுடன் இந்தியா 5வது இடத்தை பிடிக்கும்.

Read next: பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு மருந்து தொடர்பான தரவுகள்