3 வயது பெண் குழந்தையை பிடித்த பேய்? இறுதியில் நடந்த கொடூர சம்பவம்

May 14, 2022 08:18 am

வடக்கு கலிபோர்னியா தேவாலயத்தில் பேயோட்டும் சடங்கின் போது பரிதாபமாக கொல்லப்பட்ட 3 வயது சிறுமியின் தாத்தா மற்றும் மாமா ஆகியோர் இந்த வாரம் கைது செய்யப்பட்டதாக போலீஸார் நேற்று தெரிவித்தனர்.

அரேலி நவோமி ப்ரோக்டர் என்ற குழந்தை கடந்த வருடம் செப்டம்பரில் இறந்தது. 

குறித்த குழந்தை ஒரு தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் நம்பியதால், ஒரு சடங்கை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சடங்கின்போது, மூச்சுத்திணறல் காரணமாக ஏற்பட்ட கொலையே இது என சாண்டா கிளாரா மாவட்ட மருத்துவ பரிசோதகர் அலுவலகம் நீதிமன்ற ஆவணங்களில் காட்டுகின்றன. 

சாண்டா கிளாரா மாவட்ட மருத்துவ பரிசோதகர் அலுவலகம் இந்த மரணம் மூச்சுத்திணறல் காரணமாக ஏற்பட்ட கொலை என்று தீர்ப்பளித்தது.

குழந்தையின் தாத்தா மற்றும் சான் ஜோஸில் உள்ள சிறிய பெந்தேகோஸ்தே தேவாலயமான Iglesia Apostoles y Profetas இன் போதகரான Rene Trigueros-Hernandez மற்றும் குழந்தையின் மாமா ரெனே ஹெர்னாண்டஸ்-சாண்டோஸ் ஆகியோரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 

பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கு வழிவகுத்த, சிறுவர் துஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக சான் ஜோஸ் காவல் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற பதிவுகளின்படி, கிளாடியா ஹெர்னாண்டஸ்-சாண்டோஸ் பொலிஸாரிடம் தனது மகள்  எழுந்துவிட்டு கத்துவார் அல்லது அவ்வப்போது அழுவாள் என்பதால் தான் பேய் பிடித்திருப்பதாக நம்புவதாகக் கூறினார். 

அவளும் அவளுடைய சகோதரனும் குழந்தையை தேவாலயத்திற்கு செப்டம்பர் 24 அன்று அழைத்து வந்தனர், அங்கு அவர்கள் தந்தையுடன் சேர்ந்து பேயோட்டுதல் செய்தார்கள்.

கிளாடியா ஹெர்னாண்டஸ்-சாண்டோஸ் பொலிஸாரிடம், தனது மகளின் தொண்டையில் விரலை போட்டு சத்தி வர வைக்க முயன்றதாகவும், குழந்தை பல முறை தூங்கிவிட்டதாகவும் பின்னர், அவர் தனது கையால் தொண்டையை கீழே தள்ளியதாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.

தாத்தாவும் மாமாவும் குழந்தையைக் கீழே வைத்திருக்கும் போது சிறுமிக்கு உணவு வழங்காமல் விட்டதாகவும், கழுத்தைப் பிடித்து அழுத்தியதாகவும் குழந்தையின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.

கிளாடியா ஹெர்னாண்டஸ்-சாண்டோஸ் பொலிஸாரிடம் தனது மகள் பதிலளிக்காததால், பொலிஸை அழைக்க அவர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்ததாக பதிவுகள் காட்டுகின்றன.


Read next: மார்வெல் ரேஞ்சில் KGF 3!! தயாரிப்பாளர் வெளியிட்ட மாஸ் அப்டேட்..! எப்போ ரிலீஸ் தெரியுமா?