பட்டதாரி காதல் ஜோடிகள் தற்கொலை

Nov 24, 2022 11:59 am

சென்னை தாம்பரம் அடுத்த பீர்கன்காரனை  அண்ணா தெருவை சேர்ந்தவர் எம்.காம் பட்டதாரியான ஜெயராமன் (26) தாம்பரம் மெப்ஸில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் இவருடைய காதலி உத்திரமேரூரை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான 

யுவராணி (24) சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்,

இவர்கள் இருவரும் 5 வருடமாக காதலித்து வந்த நிலையில் நேற்று மதியம் ஜெயராமன் வீட்டிற்க்கு யுவராணி வந்துள்ளார்,இருவரும் ஆன்லைன் மூலம் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளனர்,


இந்நிலையில் ஜெயராமனின்  தாய் மாலை வேலை முடித்துவிட்டு வீட்டிற்க்கு  வந்து பார்த்த போது ஒரே புடைவையில் ஜெயராமன் ,மற்றும் யுவராணி தூக்கில் தொங்கிய படி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் கதறி அழுதுள்ளார்,

இதனை கண்ட  அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு இருவரையும் பறிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்,

தகவல் அறிந்து வந்த பீர்கன்காரனை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து நடத்திய முதற்கட்ட விசாரனையில் ஜெயராமன்,யுவராணியும் திருமணம் செய்ய முடிவு செய்து பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர் .

அதற்க்கு யுவராணியின் பெற்றோர் சம்மதிக்க மறுத்ததால் மன உளைச்சலில் இருந்த இருவரும் இந்த விபரீத முடிவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது,

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read next: மின்சாரம் தாக்கி 5மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு