நத்தம் கோவில்பட்டியில் ஹோட்டலுக்குள் புகுந்த அரசு பேருந்து-2 உயிரிழப்பு-6 பேர் காயம்

Sep 04, 2022 11:41 pm

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் ஹோட்டல் கடைக்குள் அரசு பேருந்து புகுந்தது.மேலும்  சம்பவ இடத்திலேயே 2  பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் 6-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் .நத்தத்திலிருந்து- மதுரைக்கு பெரியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை நத்தத்தில் இருந்து மதுரையை நோக்கி பெரியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது நத்தம் அடுத்துள்ள கோவில்பட்டி புளிக்கடை  பஸ் ஸ்டாப்பில் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்தஹோட்டலுக்குள் புகுந்தது.

இதில்விநாயகர் ஊர்வலம் பார்க்க வந்த பல்வேறு ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர்.எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியதில் நத்தம் கோவில்பட்டியை சேர்ந்த தேவராஜ்(59),சிரகம்பட்டியை சேர்ந்த பாண்டி(50) ஆகிய இருவரும்  2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

அருகில் இருந்த 5 பேர் பலத்த காயமடைந்து நத்தம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.  

மேலும் விபத்தால் விநாயகர் ஊர்வலம் பார்க்க வந்த கூட்டத்தின் மீது பேருந்து புகுந்தது இந்த பகுதியில் பெரும் பரபரப்பு & சோகத்தை  ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Read next: எம்பெருமான் பிட்டுக்கு மண் சுமந்து அருள்பாலித்த தரிசனம்..