சிங்கப்பூரை விட்டு வெளியேற தயாராகும் கோட்டாபய - தாய்லாந்து வெளியிட்ட தகவல்

Aug 10, 2022 01:35 pm

தாய்லாந்துக்கு விஜயம் செய்ய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோட்டாபயவிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

எனினும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Tanee Sangrat தெரிவித்துள்ளார்.

இராஜதந்திர கடவுச்சீட்டின் கீழ், கோட்டாபய ராஜபக்சவை 90 நாட்கள் தங்கியிருக்க தாய்லாந்து அனுமதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனினும் கோட்டாய ராஜபக்ஷ எப்போது வருவார் என்பது தொடர்பான தகவலை வெளியிடவில்லை.  

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி அன்று தாய்லாந்தின் பெங்கொக் நகருக்குப் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக இதற்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Read next: இலங்கையில் அவசர கால சட்டம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு