தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம்

May 07, 2022 08:15 am

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,877-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ. 216 அதிகரித்து 39,016-ல் விற்பனையில் உள்ளது. 24 காரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,276 ஆகவும் ஒரு சவரன் ரூ. 42,208 ஆகவும் விற்பனையாகிறது. 

உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை வணிகத்தில் அதிகரித்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. 

Read next: பாரிஸ் வன்முறை!! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு