இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

Mar 05, 2023 01:31 am


தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றமையால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு - செட்டியார் தெருவில் நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 57 ஆயிரத்து 480 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக 15,000 முதல் 17,000 ரூபா வரையில் தங்கம் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

Read next: 470 திரைப்படங்கள் பற்றி குறித்து வைத்து இணையவாசிகளின கவனத்தை ஈர்த்த முதியவர்