இலங்கையில் ஒன்லைனில் மதுபான விற்பனைக்கு அனுமதி! வெடித்தது சர்ச்சை

Jun 16, 2021 03:14 pm

கொரோனா காலக்கட்டத்தில் வீடுகளுக்கு மதுபானம் விற்கும் முறையை எதிர்க்க வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக தினமும் சுமார் 60 பேர் இறக்கின்றனர். 

இதேவேளை, ஆல்கஹால் உட்கொள்வதலும் தினமும் சுமார் 63 பேர் இறக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் மது விற்பனை அவசியமானதா என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் டாக்டர் பிரசாத் கொலம்பேஜ் விசனம் வெளியிட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலகட்டத்தில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அல்லது மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்க முறையான எந்த திட்டமும் இல்லை.

ஆனால் இதுபோன்ற மதுபான விற்பனை முறையை பின்பற்றுவது வெட்கக்கேடான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டாார்.

Read next: எம்.பியாக பெயரிட்டு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு