ஜெர்மனியில் தொற்றுகளும் இறப்புகளும் இன்று சற்றுக் குறைந்துள்ளது-முழுமையான தரவுகள்

2 weeks

Data Source: RKI

தொற்றுகள்

ஜெர்மனியில் நள்ளிரவு 12 மணிக்கு (15.11.2020) வெளியான தகவலின்படி புதிதாக +16,947 தொற்றுகள் பதிவாகி உள்ளது. இந்தப் புதிய தொற்றுகளையும் சேர்த்து மொத்த தொற்றுகள் எண்ணிக்கை ஜெர்மனியில் 790,503 ஆக உள்ளது.

இதே சமயம் தொற்றிலிருந்து 502,300 பேர் மீண்டுள்ளார்கள், 275,700 பேர் இதுவரை தொற்றிலிருந்து மீளவில்லை. தேசிய அளவில் கடந்த 7 நாள் தரவுகளில் ஒவ்வொரு 100,000 மக்கள் தொகையிலும் 143 பேருக்குத் தொற்றுகள் பதிவாகி உள்ளது.  60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒவ்வொரு 100,000 சனத்தொகையில் 101 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


அதேவேளையில் மாவட்டங்களில் ஏழு நாள் நாள் நிகழ்வு என்று கூறப்படும் மொத்த சனத்தொகையில் உள்ள ஒவ்வொரு 100,000 பேரிலும் 50 மேற்பட்ட தொற்று 373 மாவட்டங்களில் பதிவாகி உள்ளது. 100,000 பேரில் 100 தொற்றுகளுக்கு மேலாக 277 மாவட்டங்களில் உள்ளது. 21 மாவட்டங்களில் 100,000 பேரில் 250 மேல் தொற்றுகள் பதிவாகி உள்ளது.

பவேரியா, பெர்லின், ப்ரெமன், ஹெஸ்ஸி, நார்த் ரைன்-வெஸ்ட்பாலியா, சார்லேண்ட் மற்றும் சாக்சோனி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து தேசிய அளவில் உள்ள சராசரியை விட தொற்றுகள் அதிகரித்த வண்ணமே உள்ளது.


மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர்

அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. அக்டோபர் 15 655 ஆக இருந்த எண்ணிக்கை நவம்பர் 15 திகதி 3385 ஆக உள்ளது.

ஜெர்மனியில் மொத்தம் 28128 தீவிர சிகிச்சை படுக்கைகள் உளளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 21229 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளது, 6,899 படுக்கைகள் மீதம் உள்ளது.

தற்பொழுது தீவிர சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கையான 3385 இல் 1923 பேர் (56%) சுவாசக்கருவி பொருத்தப்பட்ட படுகைகளில் உள்ளார்கள்.


இறப்புகள்

நேற்று ஜெர்மனி புதிதாக +107 இறப்புகளை பதிவு செய்துள்ளது, இதன் காரணமாக மொத்த இறப்புகளின்  தொகை 12,485 ஆக உயர்ந்தது.

R-ரேட்-ஒருவர் மற்றவருக்குக் கோவிட் நோயைப் பரப்புக்கும் எண்ணிக்கை 

ஜெர்மனியில் 7- நாள் ஆர் ரேட் தற்போழுது 1.03 ஆகவும் 4 நாள் ஆர் ரேட் 1.19 ஆகவும் உள்ளது.



Read next: இருவர் உயிரிழப்பு! பெரு நாட்டின் இடைக்கால அதிபர் திடீர் இராஜினாமா