கொரோனா தடுப்பூசி தொடர்பான மற்றுமொரு ஆய்வு

Sep 11, 2021 02:23 pm

கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு கொரோனாவால் உயிரிழப்பதற்கான ஆபத்து 11 மடங்கு குறைவாகவே உள்ளதென அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது.

தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களுடன் ஒப்பிடும் போது ஆபத்து 10 மடங்கு குறைவாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக கூறப்படுகின்றது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனத்தின் இந்த ஆய்வு மூன்று செய்திப்பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

புதுpய திரிபுகளுடன் போராடும் தன்மை தற்போதைய தடுப்பூசிகளுக்கு குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மொடர்னாவில் டெல்டாவுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கும் அளவு சற்று அதிகமாக உள்ளதென்பதும் தெரியவந்துள்ளது.

100 ஊழியர்களை கொண்ட நிறுவனங்கள் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்தார்.அவ்வாறில்லாவிடின் வாரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார்.

Read next: இலங்கையில் 11,000ஐ கடந்தது கொரோனா உயிரிழப்புக்கள்