வெள்ளிக்கிழமை பலன்கள்

May 12, 2022 11:39 pm

சித்திரை: 30

வெள்ளிக்கிழமை

13 - 05 - 2022 

ராசி- பலன்கள்

மேஷம் - ராசி

உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு மேம்படும். மாணவர்களுக்கு கற்றலில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

அஸ்வினி : ஆதரவு கிடைக்கும். 

பரணி : ஒத்துழைப்பு மேம்படும்.

கிருத்திகை : அனுகூலமான நாள்.


ரிஷபம் - ராசி

தந்திரமான சில செயல்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அமைதியான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

கிருத்திகை : இழுபறிகள் அகலும்.

ரோகிணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


மிதுனம் - ராசி

சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் ஆதாயமடைவீர்கள். உத்தியோக பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

மிருகசீரிஷம் : செல்வாக்கு மேம்படும். 

திருவாதிரை : ஆதாயமான நாள். 

புனர்பூசம் : அனுகூலம் உண்டாகும்.


கடகம் - ராசி

செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றமும், அனுபவ அறிவும் வெளிப்படும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். மதிப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்.

புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.

பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆயில்யம் : போட்டிகள் விலகும். 


சிம்மம் - ராசி

உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் அதற்கேற்ப செலவும் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

மகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

பூரம் : புரிதல் உண்டாகும்.

உத்திரம் : அனுபவம் வெளிப்படும்.


கன்னி - ராசி

வியாபார பணிகள் மந்தமாக நடைபெற்றாலும் லாபம் கிடைக்கும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். திருப்திகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

உத்திரம் : லாபம் கிடைக்கும். 

அஸ்தம் : எதிர்ப்புகள் குறையும். 

சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.


துலாம் - ராசி

அரசு தொடர்பான அனுகூலம் உண்டாகும். உத்தியோகம் ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படாலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் உண்டாகும். உதவி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

சித்திரை : அனுகூலமான நாள்.

சுவாதி : செலவுகள் ஏற்படும். 

விசாகம் : அனுபவம் உண்டாகும்.


விருச்சிகம் - ராசி

வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

விசாகம் : சாதகமான நாள்.

அனுஷம் : செல்வாக்கு அதிகரிக்கும். 

கேட்டை : ஒத்துழைப்பு மேம்படும்.


தனுசு - ராசி

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். பெரியோர்களின் ஒத்துழைப்பின் மூலம் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சி ஈடேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

மூலம் : நம்பிக்கை பிறக்கும். 

பூராடம் : திருப்பங்கள் உண்டாகும். 

உத்திராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


மகரம் - ராசி

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் பாராட்டும், மதிப்பும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும். 

திருவோணம் : மதிப்பு அதிகரிக்கும்.

அவிட்டம் : கவனத்துடன் செயல்படவும்.


கும்பம் - ராசி

உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் நிதானம், கவனம், பொறுமை, மிக அவசியம். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். கால்நடை சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.

அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.

சதயம் : கவனம் வேண்டும்.

பூரட்டாதி : புரிதல் அதிகரிக்கும்.


மீனம் - ராசி

மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உறுதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.

பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.

ரேவதி : திருப்திகரமான நாள்.

Read next: புட்டினுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஜெலென்ஸ்கி