பிரான்ஸ் ரயில் பயணிகளுக்கு அதிகரிக்கும் கட்டணம்!

Nov 24, 2022 06:27 am

பிரான்ஸில் அதிவேக ரயில் சேவைகளின் கட்டணங்களை சராசரியாக 5 சதவீதம் அதிகரிப்பதாக ரயில் நிறுவனமான SNCF நேற்று அறிவித்துள்ளது.

அதிகரித்து வரும் எரிசக்தி செலவினங்களைச் சமாளிக்க இவ்வாறு ரயில் டிக்கட் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி முதல் இந்த கட்டணம் அமுலுக்கு வரும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த அதிகரிப்பு கடைசி நிமிடத்தில் வாங்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கும் தொடர்பானதாகும் என கூறப்படுகின்றது.

எப்படியிருப்பினும் முன் பதிவு செய்த டிக்கட்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொள்வனவு செய்யப்பட்ட டிக்கட்களுக்கான பரிவர்த்தனை மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் நிபந்தனைகளும் பெப்ரவரி மாதம் முதலாம் அன்று முதல் மாற்றமடையும் என குறிப்பிடப்படுகின்றது.

பிரான்ஸில் அதிகரித்துள்ள பணவீக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய நிறுவனங்களை போன்று SNCFயும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில்களுக்கான எரிபொருள் செலவீனம், ஊழியர்களின்  சம்பள அதிகரிப்பு, பிற செலவீனங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

அடுத்த வருடத்தின் எரிசக்தி விலைகளில்  மற்றும் பிற பொருட்களின் பணவீக்கத்திற்கு இடையில், SNCFயின் செலவுகள் 13 சதவீதம் அதிகரிக்கும் என தற்போது வரையிலும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செலவினங்களின் முழு அதிகரிப்பையும் ரயில் கட்டணங்களுக்குள் உட்படுத்தினால் அடுத்த ஆண்டு ரயில் டிக்கட் கட்டணங்கள் 13 சதவீதம் அதிகரிக்க நேரிடும் என்ற போதிலும் மக்களின் நிலையை கருத்திற் கொண்டு 5 சதவீதம் மாத்திரம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக SNCF அறிவித்துள்ளது.

பயணச்சீட்டுக் கட்டண உயர்வைத் தணிக்குமாறு அரசாங்கத்தால் அழுத்தம் கொடுக்கப்பட்டது மற்றும் கட்டணங்களை அதிகமாக அதிகரித்தால் ரயிலின் ஈர்ப்பு சிதைந்துவிடும் என்று பயந்து, SNCF தனது கட்டணத்தை சிறிய அளவில் அதிகரித்துள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

Read next: கால்பந்து விளையாட்டிற்கு அரசு முதன்மை இடத்தை தரவேண்டுமென தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம்