மூன்றாவது நாளாக பிரான்ஸ் 10,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்களை பதிவு செய்தது

Jul 18, 2021 10:04 pm

இன்று ஞாயிறு பிரான்ஸ் புதிதாக மேலும் 12,500 தொற்றுக்களை பதிவு செய்தது, இவ்வாறு மூன்றாவது நாளாக பிரான்ஸ் 10,000 துக்கும் மேலாக கோவிட்-19 தொற்றுக்களை பதிவு செய்து வருகிறது. இவ்வாறு கோவிட் தொற்றுகள் அதிகரிப்பதற்கு இந்தியாவில் முதலில் அடையலாம் காணப்பட்ட மாறுபட்ட டெல்டா வைரஸ் தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பிரான்சில் 5.87 மில்லியன் பேருக்கு கோவிட் தொற்றுகள் ஏற்பட்டடுள்ளது.

சனிக்கிழமை 10,949 தொற்றுகளையும், வெள்ளி 10,908 தொற்றுக்களையும் பிரான்ஸ் பதிவு செய்து இருந்தது

 பிரான்சில் தற்பொழுது 891 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் அதேவேளை புதிதாக இறந்த 5 பேரையும் சேர்த்து இதுவரை 111,472 பேர் கோவிட் தாக்கி இறந்துள்ளார்கள்

Read next: அமெரிக்காவின் ஆலோசனைக்கு பதிலடி கொடுத்த ஹொங்கொங் தலைமை நிர்வாகி கேரி லாம்