புதிதாக அதிரவைக்கும் 80,711 கொரோனா தொற்றுக்களை பதிவுசெய்தது பிரான்ஸ்

1 week

பிரான்ஸ் சுகாதார அமைச்சு அறிவித்த தகவலின் படி அங்கு (4 ஏப்ரல் 2021 தரவுகள் படி) புதிதாக +80711 தொற்றுகள் பதிவாகிய காரணத்தால் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 4,822,470ஆக உயர்ந்துள்ளதுஇவ்வாறு தொற்றுகள் அதிகரித்து வருவதால் பிரான்ஸ் உலக  தொற்றுகளின் அடிப்படையில் தரவரியையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

கோவிட் தொற்றின் பாதிப்பின் காரணமாக புதிதாக மேலும் +470 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்- இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,356ஆக தற்பொழுது உள்ளது. அவர்களில் 5,254 தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்கள். இது 5 மாத கால அளவில் மிகப்பெரிய ஒரே நாளில் 145 ஆள் ஏற்பட்ட அதிகரிப்பு ஆகும்.

பிரான்சில் கோவிட் தாக்கி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 96650 ஆக உள்ளது-இது புதிதாக உயிரிழந்த +185 பேரையும் உள்ளடக்கும்.

பிரான்சில் இதுவரை 9 251 321 பேருக்கு முதல் தடுப்பு மருந்தும் 3 091 225 பேருக்கு இரண்டு தடுப்பு மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த சனத்தொகையில் 13.81% பேருக்கு குறைந்தது ஒரு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. 4.61%  விகிதம் பேர் இரண்டு தடுப்பு மருந்துகளையும் பெற்றுள்ளனர். நாட்டின் சனத்தொகையில் 46.19% சனத்தொகைக்கு தடுப்பு மருந்தை கொடுத்தால் 60 தடுப்பு மருந்து விகிதத்தை பெறமுடியும். 60 விகித தடுப்பூசியை கொடுத்தாலும் 60 விகித நோய் தடுப்பை பெறமுடியும் என்று பொருளப்பட முடியாது.

Read next: இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது! அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை பிடித்தது