தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த பிரான்ஸில் அவசரகால நிலை பிரகடனம்

1 month

கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிரான்ஸ் அரசாங்கம் நாட்டில் பொதுசுகாதார அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

தீவிரமாக பரவும் கொவிட் வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனைத்து அதிகாரங்களையும் அரசாங்கம் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.

பொது சுகாதாரத்தை மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும் வைரஸின் தன்மை மற்றும் தீவிரம் என்பவை பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்கம் விடுத்துள்ள அவசரகாலநிலை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர அவை எவ்வாறானவை என்பது அறிவிக்கப்படவில்லை.

தேசிய தொலைக்காட்சியில் இரவு ஒளிப்பரப்பாக உள்ள நேர்காணலின் போது எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பான திட்டத்தை ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி நான்கு வாரகால இரவு நேர ஊரடங்கு சட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.

இந்த ஊரடங்கு இரவு 9 மணியிலிருந்து மறுநாள் காலை ஆறு மணி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது.இவ்வாறான ஒரு அறிவிப்பையும் ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வருடம் மார்ச் மாதம் பிரான்ஸ் அரசாங்கம் இவ்வாறானதொரு அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியிருந்தது.

இதன்போது அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்வது தவிர்ந்து வீடுகளிலிருந்து மக்கள் வெளியே செல்வதற்கு தடை விதிக்கும் வகையிலான அதிகாரங்களை அதிகாரிகள் கையில் எடுத்திருந்தனர்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்த நிலையில் இந்த அவசரகால நிலை ஜுலை மாதம் பிரான்ஸின் பிரதான நிலப்பரப்பில் நீக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் நாட்டில் மீண்டும் தொற்று தலைத்தூக்கியுள்ளதுடன் இரணடாம் அலை உருவாகும் விளிம்பில் உள்ளதாகவும் பிரதமர் ஜீன் கெஸ்;டக்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜுன் 25 ஆம் திகதிக்கு பின்னர் முதல் தடவையாக வைத்தியசாலையில் அனுமுதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 9100 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read next: சீனாவில் மீண்டும் கொரோனா! உயர் அதிகாரிகள் இருவர் அதிரடியாக பணி நீக்கம்