சட்டத்தரணிகளின் குழு கலந்து கொண்ட விருந்தில் வெடித்தது மோதல்!

1 week

கண்டியில் இன்று அதிகாலை ஒரு சுற்றுலா ஹோட்டலில் வக்கீல்கள் குழு கலந்து கொண்ட விருந்தில் ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

குறித்த நிகழ்வில் ஒரு வழக்கறிஞரின் இரண்டு உறவினர்களுக்கும் ஹோட்டல் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக உருவாகி உள்ளது.

இதில் காயமடைந்தவர்களில் இரண்டு பேர் ஹோட்டல் ஊழியர்களும் உள்ளனர்.

அத்துடன் இவர்கள் சிகிச்சைக்காக கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்த மோதலில் ஹோட்டல் உபகரணங்களும் கடுமையாக சேதமடைந்தன

Read next: இந்தோனேசியாவை புரட்டிப்போட்ட இயற்கை அனர்த்தம்! சுமார் 44 பேர் பலி