விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரை அதிரடியாக கைது செய்த இந்திய தேசிய புலனாய்வு பிரிவு

Oct 07, 2021 04:42 pm

விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) நேற்று கைது செய்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்திச் சென்றதாகக் கூறி இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, வளசரவாக்கத்தில் வசித்து வந்த இலங்கைப் பிரஜையான இவர் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் சற்குணம் சபேசன், என தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Read next: அந்தாட்டிக்காவுக்கு சென்றடைந்தது அஸ்ரசெனெக்கா