பிரித்தானியாவுக்கு பயணிப்பவர்களை தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க அரசாங்கம் அனுமதி

1 week

பிரித்தானியாவுக்கு வருகை தருபவர்களுக்கு அடுத்த வாரம் முதல் பயண தனிமைப்படுத்தல் ஐந்து நாட்களாக குறைக்கப்படுவதற்கு அமைசசரவை அனுமதி  வழங்கியுள்ளது.

விமானத்துறை மற்றும் பயணத் துறையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானிக்கபபட்டுள்ளது.

டெஸ்ட் என்ட் ரிலிஸ் திட்டம் அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதுடன் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் 5 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு மணித்தியாலத்திற்குள் மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியும் காணப்படும் நிலையில் தொற்று உறுதியாகதபட்சத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து அவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள்.

டெய்லி மெய்லுக்கு இது பாரிய வெற்றி என்றும்; விமான போக்குவரத்து மற்றும் பயணத்தில் சீர்குலைவு ஏற்படுவதை தடுக்கும் வகையில் செப்டெம்பர் மாதம் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வேலை மற்றும் அவசர தேவைகளுக்காக மாத்திரம் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியும் என்பதுடன் இந்த கட்டுப்பாடு டிசம்பர் 2ம் திகதியுடன் தளர்த்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

கப்பல் பயணத்தையும் மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சர்கள் உடன்பட்டுள்ளனர்.

ஜனவரி முதல் உள்ளுர் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வரும் மாதங்களில் வெளிநாட்டு கப்பல் சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

செயற்பாட்டாளர்கள் தொற்று பரவாமல் இருப்பதற்கான சகல பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19000 கப்பல் சேவையாளர்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வருவதற்காக் மில்லியன் பவுண்ஸ்களை செலவிட்டுள்ளதாக வெளிவிவகார அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Read next: பிரித்தானியாவில் அனைவருக்கும் ஏப்ரல் மாத அளவில் கோவிட் தடுப்பு மருந்து கொடுத்து முடியும் -கசிந்த தகவல்