எதிர்க்கட்சி எம்.பிக்களின் ஆதரவுக்காக அரசாங்கம் 5 சதமேனும் செலவிடாது

3 weeks

நாடாளுன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக,  எதிர்த்தரப்பு எம்.பிக்களின் ஆதரவை திரட்டுவதற்கு,  அரசாங்கம் 5 சதத்தையேனும் செலவிடாதென,  சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

20ஆவது திருத்தத்துக்கு சுய விருப்பத்தின் பேரில் வாக்களிக்க எம்.பிக்கள் தயாராக  உள்ளனரெனத் தெரிவித்த அவர், அதற்காகப் பணத்தையோ பதவிகளையோ  செலவிட வேண்டிய தேவை இல்லை என்றும்   கூறினார்.  

ஆளும் தரப்புக்கு   150 ஆசனங்கள் இருப்பதால்  பணத்துக்காக ஆட்சேர்க்கும் அவசியம் இல்லை என்றும்  விருப்பத்தின் பேரில் ஆதரவாக வாக்களிக்க தயாராக உள்ளவர்களுக்கு  இடமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

அத்துடன்இ  எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் எவரும் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கபோவதில்லையென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியாக கூறியுள்ள நிலையில், அதற்கு மாறாக  எதிர்த்தரப்பு எம்.பிக்களும் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பார்கள்  என மஹிந்த அமரவீர நம்பிக்கை வெளியிட்டார். 


Read next: அமைச்சர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ப ஆலோசகர்களை நியமிக்க முடியாதுb