தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, நேற்று விடுமுறை .

1 week

தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, நேற்று  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல், ஒரே கட்டமாக நடை பெற்றிருந்தது. இந்த தேர்தலில், ஓட்டுச் சாவடி பணியாளர்களாக, ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நியமிக்கப் பட்டனர். அவர்கள், ஏப்., 5ம் திகதியே, தேர்தல் அலுவலர்களாக பொறுப்பேற்றனர். தேர்தல் பணிகளின் போது சாவடியிலேயே தங்கி, ஓட்டுப் பதிவு,  ஓட்டு பெட்டிகளை, தேர்தல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணிகள் இடம்பெற்ற நிலையில்  நள்ளிரவு வரை பணியில் இருந்தனர் 

இதைத் தொடர்ந்து, தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், இன்று பணிக்கு வர வேண்டாம் என, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி கமிஷனர்கள், இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இன்றைய விடுமுறைக்கு பதில், வேறு நாளில் பணியாற்ற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Read next: கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.