மெக்சிக்கோ – வைத்தியசாலைக்குள் ஏற்பட்ட வெள்ளத்தில் நோயாளர்கள் பலர் உயிரிழப்பு

Sep 08, 2021 08:23 am

மத்திய மெக்சிக்கோவின் ஹிடால்கோ மாவட்டத்தில் பெய்த அடை மழை காரணமாக வைத்தியசாலை நீரில் மூழ்கியதுடன் 17 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

டுலா நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அருகில் உள்ள ஆறு பெருக்கெடுத்ததால் வெள்ளநீர் புகுந்து மின் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒக்ஸிஜன் வழங்கப்பட்டு வந்தவர்கள்.

வெள்ள நீரிலிருந்து 40 நோயாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இவர்களை படகுகள் மூலம் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அங்குள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மீட்பு குழுவினருடன் இராணுவமும் ஈடுபட்டுள்ளது.

வைத்தியசாலையில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து கவலை அடைவதாக மெக்சிக்கோ ஜனாதிபதி என்ரஸ் மெனுவல் லோபெஸ் ஒப்ராடோர் குறிப்பிட்டுள்ளார்.

தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மக்களை வேறு இடங்களுக்கு செல்லுமாறு மக்களை ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

வெள்ளம் காரணமாக குறித்த நகரில் உள்ள சுமார் 30000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெக்சிக்கோ சிட்டியின் வட பகுதியில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Read next: தொட்டில் புடவையில் கழுத்து இறுகி 11 வயது சிறுமி உயிரிழப்பு!