சென்னையில் டாஸ்மார்க் விற்பனையாளர் நல சங்கம் சார்பில் முதல் மாநில மாநாடு

Jan 23, 2023 01:12 pm

தமிழகத்தில் சென்னை மதுரவாயலில் தமிழ்நாடு டாஸ்மார்க் விற்பனையாளர் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் பிரம்மாண்ட மாநாடு ஜனவரி 26 அன்று நடைபெறுகிறது.

இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட டாஸ்மார்க்  கடைகளில் பணி புரியும் டாஸ்மார்க் விற்பனையாளர் நல சங்க ஊழியர்கள் கலந்து கொண்டு  மாநாட்டை நடத்த உள்ளனர்.


ராஜஸ்தான் ஒரிசா மாநிலங்கள் போன்று ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும்.

தமிழக அரசிடம் வைக்கும் முக்கிய  கோரிக்கைகள் 20 வருடமாக பணி செய்யும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிலையான சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும், பணி பாதுகாப்பு உறுதிப்படுத்த செய்யவும், இஎஸ்ஐ வசதி தேவை என்றும் இந்தப் போராட்டமானது நடைபெறுகிறது என்று டாஸ்மார்க் விற்பனையாளர் நல சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டன.

Read next: உயிரோடு எரித்துவிடுவேன் - சுவீடன் அரசியல்வாதிக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த துருக்கி எழுத்தாளர்