திருமணமாகி மூன்றே நாட்களில் போரில் உயிரிழந்த உக்ரைன் வீரர் - மனைவி எடுத்துள்ள சபதம்

May 12, 2022 01:03 pm

ரஷ்யப்படைகளால் முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில்  பதுங்கியிருந்த உக்ரேனிய போராளி ஒருவர் உயிரிழந்தார்.

இவர் திருமணமான மூன்று நாட்களிளேயே உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“வலேரியா கார்பிலென்கோ” என்ற  எல்லைக் காவலர் ஆண்ட்ரியை மணந்தார், இந்த ஜோடி மே 5 அன்று மோதிரங்களை மாற்றி திருமண உறவில் இணைந்தது.

எனினும், திரு கார்பிலென்கோ மூன்று நாட்களுக்குப் பிறகு இறந்தார்.

அவரது மனைவி ஆண்ட்ரி இப்போது தனது கணவருக்காக முற்றுகையிலிருந்து தப்பிப்பதாக உறுதியளித்தார், அவருக்காக வாழ்வதாக சபதம் செய்தார்.

Read next: ஐரோப்பிய நாடுகளிலுள்ள விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி