FIFA WC - 7 கோல்களை அடித்து கோஸ்டா ரிக்கா அணியை வீழ்த்திய ஸ்பெயின்

Nov 23, 2022 06:36 pm

கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்று எப் பிரிவில் நடைபெற்ற 3-வது போட்டியில் ஸ்பெயின் - கோஸ்டா ரிக்கா (இ பிரிவு) அணிகள் மோதின. 

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணியின் முன்கள வீரர்கள் கோல் மழைகளை பொழிந்தனர். முதல் பாதியில் டானி ஓல்மோ (11-வது நிமிடம்), மார்கோ அசென்சியோ (21-வது நிமிடம்) பெரான் டோரஸ் (31-வது நிமிடம்) ஆகியோரின் கோலால் ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.


தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியிலும் கோஸ்டா ரிக்கா அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. அதை நேரத்தில் ஸ்பெயின் அணி வீரர்கள் தொடந்து கோல்கள் அடித்தனர். 

2-வது பாதியில் பெரான் டோரஸ் (54-வது நிமிடம்), ஹாவி (74-வது நிமிடம்), கார்லோஸ் (90-வது நிமிடம்), அல்வரோ (92-வது நிமிடம்) கோல் அடித்தனர். 

இறுதியில் ஸ்பெயின் அணி 7-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Read next: ஆபத்தான மருந்துகள் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன