வாழ்வியல்

உடல் சூட்டை குறைக்கும் வெந்தயம்

நமது முன்னோர்களின் சமையலறையில் மசாலாவை போல, வைத்தியத்திற்கு தேவையான மூலிகைகளையும் வைத்திருந்தனர். அந்த வகையில் முக்கியமானது வெந்தயம். வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, நியாசின், பொட்டாசியம், இரும்பு, ஆல்கலாய்டு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

வெந்தயம் சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது மேலும் குறிப்பாக கொழுப்பு புரதத்தை குறைக்க உதவுகிறது. அதேபோல் இதய நோய்க்கு வெந்தயம் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதில் வெந்தயத்தில் உள்ள நார் சத்து இதய அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

 

வெந்தயத்தில் பொட்டாசியம் உள்ளதால் இதயத் துடிப்பு மற்றும் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயம் சாப்பிடுவதால் சர்க்கரை கட்டுக்குள் வரும். இதில் உள்ள அமினோ அமிலம் இன்சுலின் உற்பத்தியை தூண்டுகிறது.

18 Effective Methi(Fenugreek) Water Benefits - Man Matters

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கண்டிப்பாக வெந்தயம் சாப்பிட வேண்டும். இதில் உள்ள அமிலம் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும். அதேபோல் கர்ப்பப்பை சுருங்குதலை வெந்தயம் ஊக்குவிப்பதால் பிரசவ வலியை குறைத்து குழந்தை பிறப்பை தூண்டும்.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் காய்ச்சல் உணவு உடல் சூடு மற்றும் மனநிலை மாற்றத்தை சாந்தப்படுத்தும் உணவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்துக் கொண்டால் நெஞ்செரிச்சலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Organic Fenugreek Powder, Packaging Type: Loose, Packaging Size: 1 Kg

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டால் அதில் உள்ள இயற்கையான கரையக்கூடிய நார் சத்துக்கள் பசியை அடக்கி விடும். ஊற வைத்த சுத்தமான வெந்தயத்தில் இருந்து செய்யப்பட்ட பேஸ்ட்டை சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம்.

உடல் சூட்டால் வாய் முழுவதும் புண்கள் தோன்றும் பொழுது, வெந்தயத்தை வாயில் போட்டு மெல்ல கடித்து உண்பதால் வாய்ப்புண் குறையும்.

 

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content