பாதுகாப்பு கேட்டு உண்ணாவிரத போராட்டம்

Jan 24, 2023 11:10 am

திருக்கழுக்குன்றம் ஒன்றிய நென்மேலி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவரின் மிரட்டலால் பாதுகாப்பு கோரி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் லஞ்ச ஒழிப்பு பாபு.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய நெம்மேலி ஊராட்சியில் வசிப்பவர் சமூக ஆர்வலர் லஞ்ச ஒழிப்பு பாபு இவர் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட 54 ஊராட்சிகளில் லஞ்சம் இல்லாமல் பணிகள் நடைபெற குழு அமைத்து செயல்படுத்தி வருகிறார்

அதில் நென்மேலி ஊராட்சியில் ஓ எஸ் ஆர் நிலத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் 8 வது வார்டு உறுப்பினர் உட்பட திமுகவினர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து சம்பாதிப்பதாக குற்றம் சாட்டுகிறார்,

அதாவது நென்மேலி ஊராட்சியில்  தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் 100 ஏக்கர் நிலம் வாங்கினால் அதில் ஊராட்சி மக்கள் பயன்பாட்டிற்கு குறிப்பிட்ட ஏக்கர் நிலத்தினை ஒதுக்க வேண்டும்

அந்த நிலம் தான் ஒ எஸ் ஆர் நிலம் என்கிறார்கள் ஆனால் இந்த ஊராட்சியில் பூங்கா, சமுதாய கூடம் திருமண மண்டபம் என அனைத்திற்கும் இடம் ஒதுக்கியும் அதை ஊராட்சி மன்ற தலைவர் துணை தலைவர்

வார்டு உறுப்பினர் என அனைவரும் விற்று பணம் சம்பாதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்திடம் புகார் மனுவை கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொடுத்துள்ளார்,

அதற்கு எதிர் தரப்பினர் வீடு புகுந்து பலமுறை தாக்குதல் நடத்தினர், ஆனால் புகார் கொடுத்தும் காவல் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்,

தொடர்ந்து பேசிய பாபு சுடுகாடு கூட இல்லாமல் இறந்தவர்களை எப்படி எங்கு கொண்டு செல்ல முடியும் என கேள்வி எழுப்பினார் ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் தங்களது தவறை திருத்தி கொள்ளவும்

தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தியும் இன்றைய தினம் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார் இந்த போராட்டத்திற்கு பாஜக பொறுப்பாளர் தாழை கோபால் உட்பட பலர் ஆதரவு தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த வருவாய் துறையினர் தொடர்ந்து  பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Read next: தேசிய எதிர்ப்புத் தினத்தை நடத்த தொழிற்சங்கங்கள் திட்டம்!